Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என் வாழ்க்கையில் செய்த முட்டாள்தனமான செயல் இது நடிகை மாளவிகா..!

Actress Malavika

#image_title

Actress Malavika: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் மாளவிகா. பெங்களூருவில் 1979 ஆம் ஆண்டு பிறந்தமாளவிகா, தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அதன் பிறகு வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே, போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் பேரழகன் படத்தில் அம்புலி மாமா பாடலுக்கு  நடனமாடியிருந்தார். இவர் நடனமாடிய வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.  அந்த பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் நடிகை மாளவிகா.

இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணிட நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். பிறகு சுமேஷ் மேனன் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு இவரை எந்த படங்களிலும் காண முடியவில்லை. தனது குடும்ப வாழ்க்கையில் நுழைந்த மாளவிகாவிற்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

தற்போது நடிகை மாளவிகா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் திரைப்படங்களில் இருந்து ஓய்வு பெற நினைத்ததில்லை என்றும் ,எனக்கு திருமணம் ஆன பிறகு கர்ப்பம் ஆனதால்  நான் ஓய்வில் இருந்தேன். அதிலிருந்து எனக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும் நானும் படங்களில் நடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் அவர் ரூபாய் ஒரு லட்சம் செலவு செய்து வாங்கிய செருப்பு பற்றி கூறியிருந்தார். அப்பொழுது நான் ஆன்லைனில் ரூபாய் ஒரு லட்சத்திற்கு செருப்பு வாங்கியதாகவும், நான் அதை பயன்படுத்தவில்லை என்றும், அந்த காலனி எனக்கு பொருத்தமாக இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். என் வாழ்க்கையில் இது நான் முட்டாள்தனமாக செய்துவிட்டது  என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: இளையராஜா-வைரமுத்து பிரிவுக்கு காரணம் தான் என்ன?

Exit mobile version