Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை வனிதாவின் 3வது திருமணம் கோலாகலமாக முடிந்தது! இணையத்தில் பரவும் கொண்டாட்டம்!

நடிகை வனிதா 19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து ஒரு மகன், ஒரு மகள் ஆகிய 2 குழந்தைகளுக்கு தாயானார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த்ராஜன் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பெற்றார், இவருடனும் கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டார்.

இந்நிலையில் நடன இயக்குனர் ஒருவரை திருமணம் செய்யவிருந்த நிலையில் அதுவும் கைவிடப்பட்டது. வாழ்க்கையின் பல கடினமான சூழல்களை கடந்து யூ டியூப் ஒன்றை உருவாக்கிய நிலையில் அதற்கான கேமிரா படப்பிடிப்பின் போது பீட்டர் பால் என்பவரை அவருக்கு பிடித்துப் போனது. இதையடுத்து அவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார். இது வனிதாவின் 3 வது திருமணமாகும். சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் திருமண வாழ்த்தை அள்ளிவீசினர்.

ஊரடங்கு காரணமாக வனிதா- பீட்டர்பால் திருமணம் வீட்டிலேயே எளிமையாக கிறித்தவ முறைப்படி நடந்தேறியது. இதில் திருமண ஜோடிகளின் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version