Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு

ஊடகங்களை எச்சரித்த நடிகை மீனா.. 2 வது திருமணம் இல்லை என மறுப்பு

நடிகை மீனா 2 வது திருமணம் செய்யப்போவதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் அப்படி செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என நடிகை மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் வித்யாசாகர் உடல் நல குறைபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக, மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஊடங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள அவர், ஊடகங்களில் பரவும் தகவலில் உண்மை இல்லை என்றும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் அப்படி செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் நடிகை மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version