Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா?

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா?

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடிகர் சிரஞ்சீவி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவர் உயிரிழக்கும் சமயம் அவரது மனைவியான நடிகை மேகனா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். சிரஞ்சீவி இறந்து அவரின் மனைவி மேக்னா ராஜ்ற்கு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகை மேக்னா ராஜ் கணவரின் இறப்பை மறக்க தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஒரு தொலைக்காட்சி தொடரில் கன்னடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் மேக்னாவிடம் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதிலில் “என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஒரு குழுவினர் ஆலோசனை கூறுகிறார்கள். உங்கள் மகனுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு குழுவினர் கூறுகின்றனர். அப்படியானால் நான் யாரைக் கேட்க வேண்டும்?. உலகம் என்ன சொன்னாலும் உங்கள் மனதைக் கேளுங்கள் என்று சிரஞ்சீவி எப்போதும் சொல்வார். திருமணத்தைப் பற்றிய கேள்வியை நான் இதுவரை என்னிடம் கேட்கவில்லை. அவர் எப்போதும் அந்த நொடியில் வாழவேண்டும் என சொல்வார். அதனால் நான் நாளையைப் பற்றி இப்போது யோசிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version