Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை நமீதா வெளியிட்ட பரபரப்பு வீடியோ! வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர்!!

நேற்று(ஆகஸ்ட்26) நடிகை நமீதா அவர்கள் மதுரை. மீனாட்சி அம்மன் கோவிலில் தன்னை உள்ளே அனுமதிக்க வில்லை என்றும் ஜாதிச் சான்றிதழ் கேட்டதாகவும் கூறி வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்27) இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் நமீதா அவர்களுக்காக வருத்தம் தெரிவிக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

நேற்று(ஆகஸ்ட்26) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நடிகை நமீதா அவர்கள் சென்றிருந்தார். இதையடுத்து அவரிடம் கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டதாகவும் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை என்றும் இதனால் பெருத்த அவமானத்தை சந்தித்ததாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

நடிகை நமீதா அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோவில் “நான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய சென்றிருந்தேன். கோயிலில் இருந்தவர்கள் என்னை உள்ளே செல்ல அனுமதி தரவில்லை. அங்கு வேலையில் இருந்த அதிகாரிகள் என்னிடம் ஜாதிச் சான்றிதழ் கேட்டனர்.

மேலும் நான் இந்து என்பதற்கான சான்றிதழ் வேண்டும் என்று கூறினர். சொந்த தாய் நாட்டிலேயே நான் அந்நியமாக்கப்பட்டுள்ளேன். இன்று வரை யாரும் என்னிடம் ஜாதிச் சான்றிதழ் பற்றி கேட்டது இல்லை. நான் இந்துவாக பிறந்தவள். என்னுடைய குழந்தைகளுக்கும் இந்து பெயரைத் தான் வைத்துள்ளேன்.

என்னிடம் இதையெல்லாம் கேட்ட அதிகாரிக்கு எப்படி பேச வேண்டும் என்பதே தெரியவில்லை. இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும்” கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு நடிகை நமீதா அவர்களுக்கு நடந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சேகர் பாபு அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் “நடிகை நமீதா அவர்கள் வெளியிட்ட வீடியோவில் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் நிறைய கெடுபிடிகள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில் என்னையும் குறிப்பிட்டு அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். நடிகை நமீதா அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தபட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து சகோதரி நமீதா அவர்கள் வருத்தப்பட வேண்டாம். அவர்கள் வருத்தம் அடைந்திருந்தால் நாங்களும் வருந்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version