நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.2003-ம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005-ம் ஆண்டு ‘ஐயா; திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.
இவர் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை “லேடி சூப்பர் ஸ்டார்” என்று கருதப்படுகிறார்.
அவர் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் ‘போர்ப்ஸ்’ இந்தியா பத்திரிகையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் புகைப்படம் வந்திருக்கிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர். அதே சமயம் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.அது என்னவென்றால் “போர்ப்ஸ் போன்ற பெரிய பத்திரிகையின் அட்டைப் படத்தை பார்த்தால் போட்டோஷாப் செய்தது போன்று மோசமாக இருக்கிறது. நயன்தாராவை ஒழுங்காகவே புகைப்படம் எடுக்கவில்லை. வேறு யார் மாதிரியோ தெரிகிறார்.
மேலும் அவருக்கு அளித்திருக்கும் உடையும் மோசம். ஒரு லேடி சூப்பர் ஸ்டாரை இப்படித்தான் மோசமாக காட்டுவதா..???என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
தற்போது,சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நயன்தாரா நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படம் நவம்பர் மாதம் 4-ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் கடந்த 9-ம் தேதி வெளியான சாரல் காற்றே பாடலின் லிரிக்கல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்படுவதோடு அனைவரையும் ஈர்த்துள்ளது .