Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்! கேரள போலீசாரால் கைது

பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த நான்கு பேர் கொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அன்வர் அலி என்பவர் செல்போன் மூலம் முதலில் பூர்ணா விடம் பழகி உள்ளார்.மேலும் பூர்ணாவிடம் தான் ஒரு நகை கடை உரிமையாளர் என்று கூறியுள்ளார்.இதனையடுத்து அன்வர் அலி வீட்டில் இருந்து சிலர் பூர்ணாவின் வீட்டிற்கு வந்து பூர்ணாவை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டு சென்றுள்ளனர்.

இவர்கள் சென்ற பிறகு பூர்ணாவின் பெற்றோர் சந்தேகத்தில் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது பூர்ணாவின் வீடு,கார் மற்றும் வீட்டின் வெளிப்புற பகுதிகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளது தெரிய வந்தது.

எனவே இதை பற்றி அன்வர் அலியிடமே பூர்ணா கேட்டபோது அவர் பூர்ணாவை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து பூர்ணாவின் பெற்றோர்கள் கொச்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து விசாரித்து வந்த காவல் துறையினர் பூர்ணாவை அன்வர் அலி என்ற பெயரில் நான்கு பேர் கொண்ட கும்பல் மிரட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் ரபீக், ரமேஷ் கிருஷ்ணன் ,சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முகமது என்பது கொச்சி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Exit mobile version