பாரதிராஜாவுக்காக பிரான்சில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பிரபல நடிகை!

0
165

பாரதிராஜாவுக்காக பிரான்சில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனை செய்த பிரபல நடிகை!

இயக்குனர் மற்றும் நடிகரான பாரதிராஜா தற்போது உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இப்போது மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பாரதிராஜா நேற்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் மயங்கி விழுந்ததாகவும், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு தற்போது உடல்நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரதிராஜாவின் நெருங்கிய நண்பரும் பாடல் ஆசிரியருமான வைரமுத்து அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து அவர் தேறி வருவதாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இப்போது பாரதிராஜாவில் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இன்றளவும் கொண்டாடப்படும் ராதிகா அவருக்காக பிராத்தனை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸில் உள்ள சர்ச் ஒன்றில் மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை செய்யும் வீடியோவை அவர் வெளியிட்டு “என் இனிய இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களே விரைவில் நலமாகி வர இந்த பிராத்தனை” எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமா கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்காக சமூகவலைதளங்கள் நம்பிக்கையான வார்த்தைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.