Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தண்ணீருக்குள் மூச்சடக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

#image_title

தண்ணீருக்குள் மூச்சடக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சினிமாத் துறையில் பிரபலமாக நடித்து வரும் நடிகைகள் கூட்டத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒருவர் ஆவார். இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அடுத்து அயலான் மற்றும் இந்தியன்-2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டும் அல்லாமல் இவர் நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் ஐ.லவ்.யு என்ற காதல் த்ரில்லர் திரைப்படம் வருகின்ற 16-ம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் ஒரு காட்சிக்காக தண்ணீருக்குள்ளே மூச்சை அடக்கிய நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்க சிறப்புப் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் தனக்கு பயற்சியளிக்க ஸ்கூபா பயிற்சியாளர் ஜஹான் அடன்வாலா தண்ணீருக்குள் மூச்சை அடக்க பயிற்சி அளிப்பதாக கூறி உள்ளார்.

மேலும் இந்த ஒரு காட்சிக்காக நான் மதியம் 2 மணியில் இருந்து அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை தண்ணீருக்குள்ளேயே இருந்தேன் என்றும், கடும் குளிர் என்னை வாட்டியது, ஒரு ஷாட் முடிந்தால் வெது வெதுப்பான நீரை மேலே ஊற்றி கொள்வேன் என்றும் கூறி உள்ளார்.

தண்ணீரில் குளோரின் இருப்பதன் காரணமாக என் கண்கள் மிகவும் எரியக் கூடும் இருந்தாலும் நான் எதிர்கொண்டு நடித்தேன் என்று கூறி உள்ளார். இவரின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version