மீண்டும் நடிக்க வருவாரா நடிகை ரம்பா! 90ஸ் ரசிகர்களின் ஏக்கம்!

0
170
  1. நம் திரையுலகில் ஹீரோயின்களுக்கான காலம் மிகவும் குறைவாகவே உள்ளது. அதுவும் அவர்கள் திருமணம் செய்து அல்லது குழந்தை பெற்று விட்டால் அவர்களின் மார்க்கெட் முடிந்துவிட்டது. பிறகு அவர்கள் அக்காவாகவோ, அண்ணியாகவோ அல்லது வில்லியாகவோ படங்களில் நடிப்பார். ஆனால் தற்பொழுது அந்த நிலை கணிசமாகவே மாறியுள்ளது எனலாம். ஆனாலும் தொண்ணூறுகளில் நடித்த ஹீரோயின்களுக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் தற்போது அவ்வளவாக அமையவில்லை.
    தொண்ணூறுகளின் ஹீரோயினாக இருந்த மீனா,சிம்ரன் ஆகியோருக்கு மற்ற சில கதாபாத்திரங்களில் படங்களில் தலைகாட்டி வருகின்றனர். இவர்களின் வரிசையில் நடிகை ரம்பாவும் தொடர உள்ளார்.

    90ஸ் களின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரம்பா. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, போஜ்புரி போன்ற பல இந்திய மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில், மின்சார கண்ணா, ராசி , உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    அந்த காலத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. நடிப்பாலும் ஆடல் திறமையாலும் அழகாலும் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். பிறகு 2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    திருமணத்திற்கு பிறகும் ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக ரம்பா வலம் வந்தார். தனது மூன்றாவது குழந்தைக்கு பிறகு அவற்றில் இருந்தும் ரம்பா விலகிவிட்டார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு “ரம்பா – இந்திரநாதன்” தம்பதியருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்பு அந்த விவகாரம் சமரசம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் சேர்ந்து வாழ்கின்றனர்.

    தற்போது சமீபகாலமாக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ரம்பா தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த குழந்தைகளை பெற்ற பின்னும் அவரது இளமையுடன் தான் இன்றும் இருக்கிறார்.
    இத்தகையை இவரின் புதிய அப்டேட்கள் அவரது 90களில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதை மேலும் திரையுலகத்தில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.