நிர்வாணமாக நடிக்க தயார்! பார்த்திபன் பட நடிகை பரபரப்பு பேட்டி
கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடிகர் பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என இரவின் நிழல் திரைப்படம் விளம்பரப்படுத்தப்பட்டது. இவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்ட இந்த திரைப்படம் கடந்த சில நாட்களாக பல விதவிதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
அதில் குறிப்பாக சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்த விமர்சனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் புதிய சர்ச்சையாக அந்தப் படத்தில் நாயகியாக நடித்த பிரிகிடா, சேரிக்கு சென்றால் அங்கு கெட்ட வார்த்தை மட்டும் தான் கேட்க முடியும் என பேசியது அடுத்த சர்ச்சையை கிளப்பியது.
இரவின் நிழல் படத்தில் சில நடிகைகள் நிர்வாணமாக நடித்துள்ள காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒருவர் நாயகி பிரிகிடா, அவர் ஏன் இவ்வாறு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார் என்பதை அவருடைய சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.
மேலும் அரைநிர்வாணமாக நடித்த மற்றொருவர் ரேகா நாயர். இவர் இப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் அரை நிர்வாணமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் வந்த வண்ணமேயுள்ளது. அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நடித்ததற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த விமர்சனம் குறித்து நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் கூறியதாவது : “கலையை கலையாக பார்க்க வேண்டும். நான் இப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததனால் எனக்கு எந்த அளவு பாராட்டுக்கள் கிடைத்ததோ, அதே அளவு நெகடிவ் விமர்சனங்களும் வருகிறது. பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவியானுலாம் திட்றாங்க என்று கூறியிருந்தார்.
மேலும் எனக்கு படங்களில் ஹீரோயினா நடிக்கனும்னுலாம் விருப்பமில்லை, ஒரு பிச்சைக்காரியாகவோ, விபச்சாரியாகவோ நடிக்க வாய்ப்பு கிடைத்தால் தயங்காமல் நடிப்பேன். நல்ல கதையாக இருந்தால், கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக இருக்கிறேன். இப்படி நடிச்சா தான் இப்பல்லாம் கொண்டாடுறாங்க எனவும் நடிகை ரேகா நாயர் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.