Actress Sai Pallavi: தன் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகை சாய் பல்லவி.
தென் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படத்தில் “இந்து ரெபெக்கா” கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு வந்து இருப்பார்.இப் படம் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தது. அதனை தொடர்ந்து தெலுங்கில் ‘தண்டேல்’, ஹிந்தியில் ‘ராமாயணம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், ‘ராமாயணா’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிக்கிறார். ராவணனாக கே.ஜி.எஃப் யாஷ் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பாக வெளியான செய்திதான் தற்போது நடிகை சாய் பல்லவி கோபப்படுத்தி இருக்கிறது. அதாவது, ‘ராமாயணா’ திரைப்படம் எடுத்து முடிக்கும் வரையில் சாய் பல்லவி அசைவம் சாப்பிடப் போவது இல்லை என்றும் அதற்காக அவர் எங்கு சென்றாலும் கூடவே சமையல் கலைஞர்கள் அழைத்து செய்கிறார் என்ற தகவல் வெளியானது.
இதனை மறுத்து எக்ஸ் தளத்தில் சாய் பல்லவி பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் இது வரை என்னைப் பற்றி வெளிவந்த அவதூறுகளை நான் பொறுத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால், ‘ராமாயணா’ திரைப்படம் தொடர்பாக வந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனிமேல் என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.