தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து சாய் பல்லவி வெளியிட்டுள்ள தகவல்.!!

0
155

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் இயல்பான நடிப்பு அவரது இயற்கையான அழகு குறித்து சமூக வலைதளங்களில் பெரிய விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அழகை எவ்வாறு பராமரிக்கிறார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

அதில், “நான் எனது கூந்தல் மற்றும் தொ தோலை பராமரிப்பதற்கு செயற்கையான இரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் சோப்பு போன்ற பொருட்களை பயன்படுத்துவதே இல்லை, இயற்கையான கற்றாழை போன்ற பொருட்களையே கூந்தல் மற்றும் உடம்புக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். திரைப்படங்களில் நடிப்பதற்கு கூட நான் கூந்தலில் ஹேர் கலரிங் செய்து கொள்வதில்லை,இயற்கையான கூந்தலுடன் தான் நடித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனது அழகை பராமரிக்க ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். அது போன்ற உணவுகளை எடுத்துக் கொண்டால் உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.