Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதற்கு முன்பு..இந்த வேலையா செய்தார்.? வெளியான தகவல்.!!

நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை சமந்தா. இவர் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் தான் விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார். ஆரம்பத்தில் பொருளாதார வாழ்க்கையை சமாளிக்க திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்த சமந்தா. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.

Exit mobile version