Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணத்தை திருப்பி கொடு!! வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை  சமந்தா!!

Actress Samantha has sent a legal notice to actor Naga Chaitanya asking for money.

Actress Samantha has sent a legal notice to actor Naga Chaitanya asking for money.

CINEMA:நடிகர் நாக சைதன்யாவிடம்  பணம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் நடிகை சமந்தா.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. சமந்தா மற்றும்   நாக சைதன்யா வுக்கும் நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது.
திரையுலகில் அதிகம் பேசப்படும் தம்பதிகளாக இருந்து வருகிறார்கள்.  இந்நிலையில்  சமந்தா-நாக சைதன்யாவுக்கும் இடையில் விவாகரத்து நடக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் கசிந்தது. பிறகு இருவரும் சம்மதத்துடன் தான் விவாகரத்து வாங்க போவதாக சமந்தா மற்றும் நாக சைதன்யா தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் சமந்தாவுக்கு மையோசைட்டிஸ் என்ற நோய் ஏற்பட்டுள்ளது. தனக்கு மையோசைட்டிஸ் நோய் இருப்பதை சமூக வலைதளத்தில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்  சமந்தா. இந்த இரு ஜோடிகளும்  ஒன்றாக இருக்கும் போது ஒரு அப்பர்ட்மெண்ட் கட்டியுள்ளார்கள். இதில் தான் இருவரும் விவாகரத்து வாங்கும் வரை வசித்து வந்தார்கள். இந்த நிலையில் நாக சைதன்யா,  சொபித்தா -வை மறுமணம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

நாக சைதன்யா , திருமணத்திற்கு பிறகு அந்த  அப்பார்ட்மெண்டில் தான் குடி போக இருக்கிறார்கலாம் . மேலும்  அந்த அப்பர்த்மென்டை  நாக சைதன்யா, சொபித்தாவுக்கு பிடித்த வகையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் சொபிதா. இந்நிலையில் சமந்தா அவர்கள் அந்த அப்பர்ட்மென்ட் கட்டுவதற்கு நிறை பணம் செலவு செய்து இருக்கிறார்.

அதனால்  அப்பார்ட்மென்டில் அவருக்கு உள்ள  பங்கு  பணத்தை வழங்க வக்கீல் நோட்டீஸ் நாக சைதன்யாவுக்கு அனுப்பி இருக்கிறார் சமந்தா. இது தற்போது சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Exit mobile version