Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடிகர் நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர். அதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறும் வழி முறைகள்!

 

ஒரு வருடமாக கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. முதல் அலையில் தப்பித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன.

 

1. மிகவும் முக்கியமானது அனைவரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதனால் கொரோனா தாக்குவதில் இருந்து கண்டிப்பாக தப்பிக்க முடியும். மேலும் பலருக்கு முகக்கவசம் எப்படி அணியவேண்டும் என்று தெரிவதில்லை. மூக்கை மூடாமல் வாய்க்குக் கீழே இறக்கிவிட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் துணியினால் செய்த முகக்கவசம் பாதுகாப்பற்றது. மருத்துவர்கள் பயன்படுத்துவதே ஏற்று தக்கது. அப்படி இல்லை எனில் இரண்டு முக கவசத்தை அணியுங்கள்.

2. வீட்டிற்குள்ளே இருக்கும் பொழுதும் சரி தனிமையை கடைபிடியுங்கள். உறவினர்களோ அல்லது நெருங்கிய நண்பர்களோ வரும் பொழுது கூட முக கவசத்தை அணியாமல் மெத்தன போக்காக இல்லாமல் நீங்களும் முகக்கவசம் அணிந்து, அவர்களையும் போடச் சொல்லுங்கள். நமக்காகத்தான் அரசு முக கவசத்தை போட சொல்லி இருக்கிறது. அதனால் உலகை காப்பாற்ற வழிமுறைகளை பின்பற்றுங்கள். இதை நாம் பின்பற்றவில்லை என்றால் ஒரு ஊரடங்கு அல்ல, பல ஊரடங்குகளை நாம் சந்திக்க வேண்டியதிருக்கும். நாலு பேர் வழிமுறைகளை பின்பற்றி எந்த பயனும் இல்லை. அனைவரும் பின்பற்றினால் தான் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடியும். சில நாட்கள் கடினமாகத்தான் இருக்கும். சூழல் மாறுவது நம் கையில்தான் உள்ளது.

 

ஆகவே தயவு செய்து தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, கைகள் சுத்தம் என எதையும் மறக்காதீர்கள். அரசாங்கத்தோடு ஒத்துழைப்போம், நாட்டை காப்போம் என்று அவர் வழிமுறைகளை கூறியுள்ளார்.

Exit mobile version