Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அழகிய உடையில் அமர்க்களமாய் போஸ் கொடுத்த அஜித் மச்சினிச்சி!! பேபி ஷாமிலியா இது?!!

கோலிவுட்டில் 90களில் முன்னணி நடிகையாக அனைவரும் ரசித்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஷாலினி ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஷாலினி மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

அதனையடுத்து, ஷாலினி தமிழில் தல அஜித்துடன் பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தார். மேலும், அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் இருந்து விலகி, தற்போது இரண்டு குழந்தைகளை பார்த்து கொண்டு வருகிறார்.

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாமிலி ஆவார். இவர் அஞ்சலி படத்தில் குழந்தையாக நடித்த பின் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இவர் நடிகர் அஜித்தின் மனைவியின் தங்கை ஆவார். ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்ததை போல தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஷாமிலி பல படங்களில் நடித்து கலக்கினார்.

இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று மற்ற விஷயங்களில் ஆர்வத்தை கொண்டு வந்தார் ஷாம்லி. மேலும், ஓவியம் தீட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஷாமிலி சமீபத்தில் ஓவியப் புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது ஹேர்ஸ்டைலை மாற்றி ஒரு பொம்மை போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அது மிகவும் வைரலாகி வருகின்றது.

Exit mobile version