காதலிக்க பிடிக்கும் ஆனால் கல்யாணம் பிடிக்காது!! நடிகர் கமல் மகள் ஓபன் டாக்!!

0
119
Daughter of actor Kamal Haasan

Shruti Haasan: நடிகை ஸ்ருதிஹாசன் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் உலக நாயகன் எனப் போற்றப்படும் நடிகர்  கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்(38).  ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த படத்திற்கு  தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்காக இவர் உடல் எடையை குறைத்து இருப்பார்.

இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிவித்து இருந்தார். அதன் பிறகு, பூஜை ,புலி ,வேதாளம், சிங்கம்  போன்ற படங்களில் நடித்தார். இவர் கடைசியாக சலார் என்ற படம் வெளியானது. இவர் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பாடல் பாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசனிடம்  பொதுவாக திருமணம் எப்போது என்ற கேள்வியை எழுப்பும் போதெல்லாம் அதை தவிர்த்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில்  செய்தியார்கள் திருமணம் பற்றி கேள்வி எழுப்பிய போது பளிச் என்றும் பதில் கூறி இருக்கிறார்.

அதாவது, தனக்கு காதலிக்க பிடிக்கும் என்றும் ஒரு வருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்பினேன் ஆனால் திருமணம் செய்ய பிடிக்காது எனக் கூறி இருக்கிறார். மேலும், தான் திருமணம் பற்றி இது வரை யோசித்தது இல்லை எனக் கூறி இருக்கிறார். ஆனால் வருங்காலங்களில் அதை பற்றி யோசிக்க வாய்ப்பு உள்ளது  கூறி இருக்கிறார்.