இளமை மாறா புன்னகையுடன் நடிகை சீதா.!இயற்கை முறையில் மாடித்தோட்டம்! 55 வயதில் அழகை பராமரிக்கும் ரகசியம்!
இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து அன்றாட அத்தியாவசிய காய்கறிகள் வீட்டிலேயே கிடைப்பதாக நடிகை சீதா கூறியிருப்பது இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. 1990 காலகட்டங்களில் சிறப்பான நடிகையாக வலம்வந்தவர் பல வெற்றிப்படங்களையும் கொடுத்தவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணத்தால் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். கொரோனா பாதிப்பு உண்டாக காலத்தில் எவ்வாறு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பது பற்றி அவர் கூறியிருப்பது பலருக்கு ஆவலை தூண்டியுள்ளது.
தனது வீட்டு மாடியில் தோட்டத்தை அமைத்து இந்த இக்கட்டான சூழலில் அத்தியாவசிய பொருட்களுக்கு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் வழிவகையை மிக நேர்த்தியாக கையாண்டு வருகிறார். மாடித்தோட்டம் அமைத்தபோது, சென்னையில் இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சீதோஷ்ண நிலையில் இது சரிவராது என்று அவருடைய தோழிகளும் உறவினர்களும் கூறியுள்ளனர்.
இயற்கையின் மீதுள்ள நம்பிக்கையில் மாடித் தோட்டத்தை ஆரம்பித்துள்ளார். வந்தால் நன்றாக வரட்டும் என்றும் இல்லையேல் இதனை அனுபவமாக எடுத்துக்கொள்வதாக தோழிகளுடன் கூறியுள்ளார். ஆரம்பகட்ட காலத்தில் சிறு குழந்தையை போல் ஆர்வமாக இந்த மாடித்தோட்டத்தை பராமரித்து வந்தேன் அதேபோன்றுதான் இப்போதும் பராமரித்து வருகிறேன், இதனால் எனக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. தற்போதைய ஊரடங்கு உத்தரவு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகளை வாங்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். உறவினர்களும் தற்போது நாங்களும் மாடித்தோட்டம் அமைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இயற்கை முறையில் சாணம், பஞ்சகாவ்யா, வேப்பெண்ணெய் கரைசல், காய்கறி கழிவுகளை மட்டுமே இயற்கை இடு உரமாக பயன்படுத்தி வருகிறேன். தினந்தோறும் தோட்டத்திலேயே நேரத்தை கழிப்பதால் மனதிற்கு மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த கொரோனா ஆபத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்பதை இயற்கை உணர்த்தியுள்ளது. இனியாவது இயற்கைக்கு எதிராக எதையும் செய்யாமல் அதனோடு ஒன்றிணைந்து வாழ்ந்தால் மட்டுமே நன்மை நடக்கும் என்பதை உலக மக்கள் உணர வேண்டும் என்று தனது பேட்டியின் மூலம் வேண்டுகோளை வைத்துள்ளார். இவரது பேட்டி இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.