Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல் 

#image_title

நடிகை ஸ்ரீதேவிக்கு இருந்த மோசமான பழக்கம்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்

நடிகை ஸ்ரீதேவி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் உள்ளங்களில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார். ஸ்ரீதேவி அவரது நடிப்பாலும், அழகாலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 300 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியானார். ஹிந்தி சினிமாவில் நுழைந்த பிறகு பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டார். இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்தார்.

பாலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, முன்னணி தயாரிப்பாளர்  போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்தின்போதே இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு இரண்டாவது மனைவியாவார்.  திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு சிறிது இடைவெளி விட்ட ஸ்ரீதேவி, பிறகு சில முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார்.

தற்போது அவரது மகள் ஜான்வி  முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு இருக்கும் பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்தார். இவரது மரணம் அப்போது ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவி மரணித்து ஐந்து ஆண்டுகள் ஆனா நிலையிலும், இவரது மரணம் இன்னும் மர்மாகவே உள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழிகளில் ஒருவரான நடிகை குட்டி பத்மினி, ஸ்ரீதேவி குறித்து ஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் அம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். தினமும் மது அருந்தும் பழக்கத்தை வைத்து இருந்த அவர், தனது மகள் ஸ்ரீதேவிக்கும், மதுவை கொடுத்து அவரையும் அடிமையாக்கி விட்டார். தனது தாயால்தான் ஸ்ரீதேவி மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரின் வாழ்க்கை இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

நடிகை ஸ்ரீதேவி குறித்து, குட்டி பத்மினி கூறிய விசயம் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version