30 ஆண்டுகால சினிமாவில் ஒரு திரைப்படத்தை மட்டும் இயக்கிய நடிகையர் திலகம்!! காரணம் இது தானா!!

0
82

நடிகர் திலகம் மகா நடிகை என்றெல்லாம் அழைக்கப்படும் நடிகை சாவித்திரி அவர்கள் கடந்த 1951ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான “பாதாள பைரவி” என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து அதன் மூலம் தன்னுடைய கலை உலக பயணத்தை தொடங்கியவர்.

 

சாவித்திாியின் இயற்பெயர் சசிகலாவாணி என்பதே ஆகும். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் ஜெமினி கணேசனை மணந்தார் என்பது இவருடைய வாழ்க்கை சுருக்கமாகும்.

 

இவர் புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருடைய 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இவர் இயக்கிய திரைப்படம் ஒன்று மட்டுமே.கடந்த 1968 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “சின்னாரி பப்பலு” என்கின்ற திரைப்படத்தை சாவித்திரி இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை சில காலங்கள் கிழித்து அவர் தமிழ் மொழியிலும் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் திரைப்படம் குழந்தை உள்ளம் என்ற பெயரில் 1969 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இப்படத்தினை நடிகை சாவித்ரி அவர்களே தயாரித்து இயக்கியுள்ளார். இதில்   ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.

 

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.