Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசியலுக்கு வருகிறேனா ? இல்லையா? ஒருவழியாக உண்மையை போட்டுடைத்த நடிகை திரிஷா !

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான த்ரிஷா சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது ‘ராங்கி’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க போகிறார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா ‘ராங்கி’ எனும் அதிரடி கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார், இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனஸ்வர ராஜன் , ஜான் மகேந்திரன் ,லிசி ஆண்டனி , கோபி கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது த்ரிஷா ராங்கி படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.Raangi: Trisha Krishnan learns how to ride the heavy duty Bullet for M  Saravanan's film | PINKVILLA

இதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சில மாதங்களுக்கு முன்னர் த்ரிஷா கொடி படத்தை போன்று ஒரு பிரபல அரசியல் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியானது. தற்போது இந்த வதந்திகளுக்கு திரிஷா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், தனக்கு அரசியலில் ஈடுபட விருப்பமில்லை, தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், 1% கூட நான் அரசியலில் சேர வாய்ப்பு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதவிர திருமணம் பற்றிய கேள்வியை எழுப்புவது தனக்கு பிடிக்காது என்றும் இனிவரும் காலங்களில் அதை பற்றி யாரும் கேட்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version