“குட் பேட் அக்லி”படப்பிடிப்பு தளத்திலிருந்து திடீரென கிளம்பிய நடிகை திரிஷா .. காரணம் என்ன ?

0
101
Actress Trisha suddenly left the shooting site of "Good Bad Ugly" .. What is the reason?

நடிகர் அஜித் மற்றும் நடிகை திரிஷா பல வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் படமாக விடாமுயற்சி உள்ளது. இப்படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என பட குழு தெரிவித்து இருக்கிறது. “விடாமுயற்சி” படத்தினை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படமாக “குட் பேட் அக்லி” உள்ளது. ஆனால் இப்படத்தில் திரிஷா நடிப்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

குட் பேட் அக்லி திரைப்படம் ஸ்பெயின் நாட்டில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், த்ரிஷா திடீரென கிளம்பி சென்னைக்கு வந்துள்ளாராம்.

திடீரென நடிகை திரிஷா படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி வந்ததற்கு காரணம் என்னவாக இருக்கும் என பலரும் யோசித்த நிலையில், அங்கே ஏதேனும் சண்டை நிகழ்ந்து இருக்குமோ ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை திரிஷா குட் பேட் அக்லி திரைப்பட சூட்டிங் இல் இருந்து கிளம்பி வந்ததற்கு காரணம், அவர் சென்னையில் ஒரு நகை கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக வந்துள்ளார் என்று செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

நகைக் கடை விளம்பரத்தில் நடித்த முடித்தவுடன் மீண்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்படும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்து விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.