நடிகை செய்த ட்வீட்! அரசு செய்யும் கொலை! கடுப்பான அரசு!
தமிழ் திரையுலகினர் பலரும் முகநூல்,இன்ஸ்டாக்ராம் போன்ற ஆப்களில் தங்களது பொழுதைபோக்கவும், தங்களை பற்றிய தகவல்களை மக்களிடம் உடனுக்குடன் தெரிவிக்கவும் பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில் நடிகை ஒருவர் அரசை மிகவும் கண்டித்து ட்வீட் ஒன்றை வெளி இட்டுள்ளார்.
அந்த நடிகை தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.இவர் ஹிந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவின் கசின் தங்கையான மீரா சோப்ரா .இவர் தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே!ஆருயிரே! என்ற படத்தில் 2005 ம் ஆண்டு அறிமுகமானார் என்பது குறிப்பிடப்பட்டது.
இவர் தனது நெருங்கிய உறவினர்களை கொரோனா தொற்றின் காரணமாக இழந்துள்ளார் என்றும், அதற்கு காரணம் அரசே எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.அவர்கள் மரணமடைய காரணம் நம் நாட்டின் மருத்துவ கட்டமைப்பே எனவும், அரசின் மெத்தனமே காரணம் எனவும் கூறியுள்ளார்.
இவர் செய்த ட்வீட்டில் இந்த மரணங்கள், கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் அல்ல என்றும், நம் தோற்றுப்போன அரசியல் கட்டமைப்பினால் செய்யப்பட்ட கொலை எனவும், நம் நாட்டில் மட்டும் தான் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறக்கின்றனர் என்றும், இந்த நிலை அனைவரையும் மிகவும் அச்சுறுத்துகிறது என்றும் கூறியிருகிறார்.
அவரது உறவினர்களில் ஒருவர் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் எவ்வளவோ போராடியும் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும், மற்றொரு நபர் சிகிச்சையின் போது ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததும் குறிப்பிடப்பட்டது.