தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் தேதி மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே மாதம் 2-ஆம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா அதிமுகவிற்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் அவர் தற்சமயம் ஓய்வில் இருந்து வருகிறார்.
அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்திருக்கிறார். இதன் காரணமாக யாரோ ஒருவர் நடிகை விந்தியா மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக வதந்தி பரப்ப, ஒருசிலர் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளை அடித்து ஒட்டி இருக்கிறார்கள். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதுதொடர்பாக நடிகை விந்தியா தன்னுடைய வலைதள பக்கத்தில் உலகத்திலேயே தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து தானே சிரிக்கும் வாக்கியம் கிடைத்தவர்கள் நானும் ஒருவர். ஸ்டாலினுக்கு ஆதரவாக வருங்கால முதல்வரே என்று சுவரொட்டிகள் ஒட்டி சோர்ந்து போய் விட்டார்கள் போலும், இதுபோன்ற சுவரொட்டிகளை பார்த்தால் ஆயுள் கூடும் ஆண்டவனை தவிர எனக்கு என்டு கார்டு போட எவனாலும் முடியாது ராசா என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!
