Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலையில் சிக் என்று போட்டோ ஷூட் நடத்திய நடிகை! வர்ணிக்கும் ரசிகர்கள் !

நடிகர் விஜய்யின் போக்கிரி என்ற படத்தின் கன்னட ரீமேக்கான ‘பொர்க்கி’ என்ற படத்தில் அறிமுகமானவர் தான் இந்த பிரணிதா சுபாஷ். தற்போது பல கன்னட திரைப்படங்களில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனது அறிமுக திரைப்படத்திலேயே கிட்டத்தட்ட 100 நாட்கள் வெற்றியை கண்டதால் இவர் இவரின் முதல் படியே வெற்றி படியானது என்றே கூறலாம். இதன்பிறகு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரணிதா தமிழில் அருள்நிதியுடன் இணைந்து  ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.மேலும் இவர் சகுனி மாஸ் என்ற மாசிலாமணி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவர் எடிசன் பெஸ்ட் ஆக்டிரஸ்என்ற விருதை மாஸ் என்ற மாசிலாமணி படத்திற்காக பெற்றார். தமிழில் கடைசியாக இவர் நடித்த படங்கள் எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகும் 

இது தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தவர் தற்போது ஹிந்தியில் இரண்டு பெரிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று ஹிந்தி வட்டாரங்கள்  சொல்கின்றனநடிகை பிரணிதா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை காட்டியவாறு சேலையில் உள்ள புகைப்படம் ஒன்று  பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ ரசிகர்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

Exit mobile version