Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவர்ச்சியான உடலுக்காக மாதம் பல லட்சம் செலவு செய்யும் நடிகை!!

#image_title

கவர்ச்சியான உடலுக்காக மாதம் பல லட்சம் செலவு செய்யும் நடிகை!!

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி அவர்கள் , தற்போது தனது கவர்ச்சியான உடல் அமைப்பிற்காக மாதம் பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது, 35 வயதாகும் டாப்ஸி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என் மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். அதோடு, காதல், கல்யாணம் போன்ற வதந்திகளில் சிக்காமல், ‘எஸ்கேப்’ ஆகி, தன் கவர்ச்சியான ஆன உடல் கட்டை தொடர்ந்து பேணி காத்து வருகிறார்.

இதுகுறித்து கேட்டால், ‘இப்போது வரை, நான், ‘மோஸ்ட் வான்டட்’ நடிகையாக இருக்கிறேன் என்றால், அதற்கு என் திறமை மட்டுமே முக்கிய காரணம் அல்ல. எனது உடல் அமைப்பு தான் என்று கூறியுள்ளார். இதற்காக, என், ‘டயட்டீஷிய’னுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வருகிறேன் என்று நடிகை டாப்ஸியே உண்மையை போட்டு உடைத்துள்ளார். இது உடல் அமைப்பை பராமரிப்பதற்காக, கண்காணிப்பாளருக்கே ஒரு லட்சம் ரூபாய் என்றால் இதுபோக பிரத்தியேகமான உணவு வகைகள், மருந்துகள், உடற்பயிற்சிகள் என மாதந்தோறும் நடிகை டாப்ஸி பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக கூறப்படுகிறது.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள், நடிகர்கள் சில லட்சம் ரூபாய்களை, இதுபோன்ற விஷயங்களுக்காக செலவிடுவது வழக்கமான ஒன்று தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

 

 

Exit mobile version