கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்..

0
54
#image_title

கடுமையான சுவாச பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இந்த கீரை ஒன்றே போதும்..

மூலிகை செடிகளில் ஒன்று முசுமுசுக்கை கீரை. இந்த கீரை சுவர்,தரையில் படர்ந்து வளரக்கூடியது. இதன் தண்டுகளில் முட்கள் இருக்கும். மயிரிழைகள் சொரசொரப்பாக இருக்கும். ஆனால், இக்கீரையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்டுள்ளது.

ஒருவருக்கு நுரையீரலில் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கீரை மருந்தாக பயன்படும். மேலும், கபநோயை போக்கும். இந்தக் கீரையை கொம்புபுடலை, பேய்புடலை, மொசுமொசுக்கை, மாமுலி, ஆயிலேயம் என பல பெயர்கள் உண்டு.

இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை கிடைக்கும். நிறைந்திருக்கிறது.

சரி வாங்க.. இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம் –

மனநிலை சீராக்க

முசுமுசுக்கை இலையை மாவில் அரைத்து, தோசை, அப்பம் என சுட்டு சாப்பிட்டால் உடலில் ஏற்பட்ட நோய்கள் குணமாகும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.

ஆஸ்துமாவுக்கு

முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி உணவில் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மூச்சுதிணறல் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.

இளநரைக்கு

முசுமுசுக்கை இலையை தைலமாக தயாரித்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மற்றும் வழுக்கை ஏற்படாமல் தடுக்கும்.

இருமல் குணமாகும்

முசுமுசுக்கை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலுப்புருக்கி, காசநோய், இளைப்பு போன்றவை குணமாகும். முசுமுசுக்கை பொடியை தண்ணீர் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நன்மை பயக்கும்.

காச நோய்க்கு

இந்த முசுமுசுக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், காசநோய மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க கூடியது.

கண் எரிச்சலுக்கு

முசுமுசுக்கை வேரை உலர்த்தி தூள் செய்து, ஒரு டம்ளர் நீரில் இட்டு சூடு செய்து குடித்து வந்தால் கண் எரிச்சல் சரியாகும்.

ரத்தம் சுத்திகரிக்க

முசுமுசுக்கை இலையுடன் நல்லெண்ணெ சேர்த்து வதக்கி அதை துவையலாக்கி சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தம் சுத்திகரிக்கப்படும்.