Adathodai: உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தால் மூலிகைகளில் ஒன்று ஆடாதோடை.இவை சளி தொல்லை முதல் மார்பு வலி வரை அனைத்திற்கும் அருமருந்தாக உள்ளது.கசப்பு சுவையை கொண்டிருக்கும் இந்த இலைகளை ஆடு தீண்டாது என்பதினால் ஆடாதோடை என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய வைத்தியத்தில் ஆடாதோடை முக்கிய பங்கு வகிக்கிறது.ஆடாதோடையில் கசாயம்,தேநீர் செய்து குடித்து வந்தால் உடல் வியாதிகள் சட்டுனு குறைந்து விடும்.சளி,மூச்சி விடுதலில் சிரமம்,ஆஸ்துமா,ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வரலாம்.
வயிற்றில் நெண்டி கொண்டிருக்கும் புழுக்களை அழிக்க ஆடாதோடை கசாயம் செய்து குடித்து வரலாம்.உங்கள் மார்பு பகுதியில் வலி,வீக்கம் ஏற்பட்டால் ஆடாதோடை இலையுடன் இரண்டு வெற்றிலையை மடக்கி சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
ஆடாதோடை இலையை உலர்த்தி பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.அரைத்த ஆடாதோடையுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலி,காய்ச்சல்,இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து எருமைப்பாலில் கலந்து குடித்து வந்தால் சீத பேதி நிற்கும்.ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆடாதோடை இலையு,சிறிது துளசி மற்றும் குப்பைமேனி சேர்த்து காய்ச்சி வடிகட்டி குடித்தால் உடலிலுள்ள நஞ்சு முறியும்.
ஆடாதோடை இலையுடன் வேப்ப இலை,சிறியா நங்கை இலை சேர்த்து அரைத்து புண்,தழும்பு மீது பற்று போட்டு வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.ஆடாதோடை இலையை அரைத்து 250 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் விலாவலி நீங்கும்.