குழந்தைகளுக்கு சளி பிடித்தால் அம்மாக்கள் கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடுப்பதை பார்த்திருப்பீர்கள்.இந்த கற்பூரவல்லி இலை சாறு சளிக்கு மட்டும் அல்ல இருமல்,காய்ச்சல் போன்றவற்றிற்கும் டானிக் போல் பயன்படுகிறது.
இந்த இலையை கசக்கினால் ஓமம் வாசம் வருவதால் இதை ஓமவல்லி இலை என்றும் அழைப்பார்கள்.இந்த கற்பூரவல்லி இலை அதிகளவு ஆரோக்கிய நன்மைகளை தனக்குள் உள்ளடக்கி வைத்திருக்கிறது.
கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு டானிக் போல் கொடுக்கலாம்.இதனால் சளி,இருமல் சீக்கிரம் குணமாகிவிடும்.சளி அதிகமானால் நெஞ்சு பகுதியில் வலி மற்றும் எரிச்சல் முதலான பாதிப்புகள் ஏற்படும்.இதை சரி செய்ய கற்பூரவல்லி சாறு பயன்படுகிறது.
1)கற்பூரவல்லி இலை
2)வெற்றிலை
3)தண்ணீர்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.பிறகு அதில் ஒரு வெற்றிலையை கிள்ளி போடுங்கள்.அடுத்து ஒரு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் சளியால் உருவான நெஞ்சு எரிச்சல்,நெஞ்சு வலி பாதிப்பு குணமாகும்.
கை குழந்தைகளுக்கு இருமல் பிரச்சனை இருந்தால் அதை கற்பூரவல்லி இலை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
1)கற்பூரவல்லி இலை
இரண்டு பிஞ்சு கற்பூரவல்லி இலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.இதை குழந்தையின் நெற்றியின் மீது சில சொட்டுகள் விட்டு தேயுங்கள்.இப்படி செய்தால் இருமல் பாதிப்பு குணமாகும்.
நீண்ட நாட்களாக வாயுக்கோளாறை சந்தித்து வருபவர்கள் கற்பூரவல்லி இலை மருந்தாக பயன்படுத்தலாம்.
1)கற்பூரவல்லி இலை சாறு
2)மோர்
3)இஞ்சி துண்டுகள்
முதலில் ஒரு கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு துண்டு இஞ்சை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
அடுத்து அரை கிளாஸ் தயிரில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்குங்கள்.அடுத்து இஞ்சி துண்டுகள் மற்றும் கற்பூரவல்லி இலை சாறு சேர்த்து கலந்து பருகுங்கள்.இப்படி செய்வதால் வாயுக் கோளாறு ஏற்படுவது கட்டுப்படும்.