தீபம் நின்று எரிய விளக்கில் இந்த ஒரு பொருளை சேருங்கள்!! கார்த்திகை தீப நாளில் நிச்சயம் ட்ரை பண்ணுங்க!!

0
105
Deepam

கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாளை கொண்டாட அனைவரும் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.வருகின்ற டிசம்பர் 13(வெள்ளிக்கிழமை) அன்று கார்த்திகை தீபத் திருநாள் கொண்டப்பட உள்ள நிலையில் அன்றைய நாளில் வீடு மற்றும் ஆலயங்களில் வைக்கும் தீபம் அணையாமல் நின்று எரிய சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.

தீபம் ஏற்ற தேவைப்படும் பொருட்கள்:

மண் அகல் விளக்கு
திரி
எண்ணெய்

கார்த்திகை தீப நாளில் புதிதாக மண் அகல் விளக்கு வாங்கி தீபம் ஏற்ற வேண்டும்.பழைய விளக்குகளை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.தங்களால் முடிந்தளவு விளக்குகளை வாங்கி வீட்டை ஒளிரச்செய்யுங்கள்.

கடைகளில் விற்கும் திரிகளை பயன்படுத்துவதை தவிர்த்து .காட்டான் பஞ்சுகளை வைத்து நீங்களே புதிதாக திரி தயார் செய்யுங்கள்.முதலில் சிறிதளவு காட்டன் பஞ்சுகளை கைகளில் வைத்து உருட்டவும்.அடுத்து சற்று பெரிய அளவில் காட்டன் பஞ்சுகளை தற்பொழுது உருட்டி வைத்துள்ள திரி மீது வைத்து உருட்டவும்.

இவ்வாறு செய்தால் திரி தயாராகிவிடும்.அடுத்து ஒரு கற்பூரத்தில் சிறிது பால் ஊற்றி சிறிது நேரம் உலரவிடவும்.மண் விளக்குகளில் தீபம் போடுவதற்கு முன்னர் விளக்குகளை தண்ணீரில் போட்டு சில மணி நேரங்கள் ஊறவிட்டு பிறகு வெயிலில் உலர்த்தி எடுக்க வேண்டும்.

பிறகு விளக்கில் தீப எண்ணெய் ஊற்றி தயார் செய்து வைத்துள்ள திரியை போட்டுக் கொள்ளவும்.அடுத்து தீப எண்ணையில் கற்பூரத்தை போட்டு திரியை பற்ற வைத்தால் நீண்ட நேரம் நின்று எரியும்.