Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு கூடுதல் அவகாசம்!!அமைச்சர் செந்தில் பாலாஜி!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மேலும் ஆறு மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

 

மேலே கூறப்பட்ட 10 மாவட்டங்களுக்கும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குள் மின்கட்டணம் செலுத்தி விட்டால் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் செலுத்த முடியும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version