Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

#image_title

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

நம் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் இஞ்சி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இஞ்சியில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-

பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது.

தினமும் 1 கிளாஸ் இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

**இஞ்சி டீ உடலை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

**செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் தினமும் இஞ்சி டீ பருகி வருவது நல்லது.

**சளி மற்றும் வறட்டு இருமலுக்கு இஞ்சி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**இஞ்சி இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இஞ்சி டீ அருந்தலாம்.

**உடலில் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க இஞ்சி டீ பருகுவது அவசியம்.

**வாயுத் தொல்லை இருக்கும் நபர்களுக்கு இவை சிறந்த தீர்வாக இருக்கும்.

**உடல் சோர்வாக காணப்படும் பொழுது 1 கிளாஸ் இஞ்சி டீ பருகலாம்.

**ஆனால் கர்ப்பிணி பெண்கள், பித்தப்பை கல் இருப்பவர்கள், அல்சர் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் இஞ்சி டீ அருந்துவதை தவிர்க்கவும்.

Exit mobile version