அடேங்கப்பா.. வேஸ்ட் என்று தூக்கி எறியும் மாதுளை தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா?

0
141

 

உங்களில் பலர் மாதுளை பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடுவதை விரும்புவீர்கள்.மாதுளை பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இப்பழம் பரிந்துரை செய்யப்படுகிறது.

 

இரத்த்தை சுத்தப்படுத்தி அதன் ஓட்டத்தை சீராக்கும் வேலையை மாதுளை பழம் செய்கிறது.ஆனால் மாதுளையை விட அதன் தோலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.

 

மாதுளை பழ தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சரும பராமரிப்பிற்கும்,உடல் ஆரோக்கியத்திற்கும் மாதுளை தோல் பயன்படுகிறது.

 

மாதுளை தோலை பொடி செய்து பாசி பருப்பு பொடியில் கலந்து உடலுக்கு தேய்த்து குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.மாதுளை தோல் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் வயிற்றுவலி,பைல்ஸ்,அதிகப்படியான இரத்தப்போக்கு உள்ளிட்டவை சரியாகும்.

 

மாதுளை தோலை பொடித்து நீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.மாதுளை தோலை பொடித்து ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் பருக்கள் நீங்கும்.

 

மாதுளை தோலில் டீ செய்து குடித்து வந்தால் இளமை தோற்றம் கிடைக்கும்.மாதுளை தோலில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

 

மாதுளை தோலை காயவைத்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.தினமும் ஒரு தேக்கரண்டி மாதுளை தோல் பொடி சாப்பிட்டு வந்தால் வாய்துர்நாற்றம் கட்டுப்படும்.