அடேங்கப்பா.. தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
தினமும் ட்ரை புரூட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைக்கும். உலர் அத்தி, உலர் கிவி, வால்நட், முந்திரி, பாதம் பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்டவைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த உலர் வகை பழங்களில் ஒன்றான திராட்சையில் பல்வேறு வகைகள் இருக்கிறது. இந்த உலர் திராட்சையை ஊறவைத்த தண்ணீரை தினமும் பருகி வந்தோம் என்றால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.
உலர் திராட்சையில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-
*ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
*நார்ச்சத்து
*இரும்புச்சத்து
*வைட்டமின்கள்
தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-
*முந்தின நாள் இரவு ஒரு பவுலில் 10 உலர் திராட்சையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் திராட்சை ஊற வைத்த நீரை பருகி ஊறிய திராட்சையை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தோம் என்றால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
*அதிகாலை எழுந்த உடன் உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
*நம் உடலில் உள்ள தேவையில்லாத நச்சு கழிவுகளை வெளியேற்ற உலர் திராட்சை ஊறவைத்த தண்ணீரை பருகுவது முக்கியம்.
*உடலில் உள்ள முக்கிய உறுப்பான கல்லீரலையும் பாதுகாக்க உலர் திராட்சை நீர் பெரிதும் உதவுகிறது.
*இரத்த சோகை, இரத்த அழுத்த,இரத்த கொதிப்பு உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் தினமும் 1 கிளாஸ் உலர் திராட்சை ஊற வைத்த நீர் பருகுவது மிகவும் முக்கியம்.
*வாயில் உள்ள கேட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை இந்த உலர் திராட்சையில் இருக்கிறது. காரணம் அதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இதன் காரணமாக பற்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு வாய் துர்நாற்ற பாதிப்பும் சரியாகும்.
*உடலில் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்ய உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவது நல்லது.
*இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவது நல்லது.
*உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உலர் திராட்சை ஊற வைத்த நீர் பெரிதும் உதவுகிறது.
*கண் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சினை நீங்க உலர் திராட்சை நீர் பெரிதும் உதவுகிறது.