அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே..

0
90
#image_title

அடேங்கப்பா.. புதினா இலையில் இவ்வளவு மகிமை அடங்கியிருக்கிறதா? இது தெரியாம போச்சே..

புதினா இலையில் எண்ணற்ற மருத்துவ மூலிகை அடங்கியுள்ளது. புதினாவை நாம் உணவின் வாசனைக்காகத்தான சேர்த்து வருகிறோம் என்று நினைக்கிறோம். உண்மையில், அதில் நிறைய மருத்துவ பண்புகள் அடங்கி இருக்கிறது.

புதினாவில், நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு உள்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், புதினா இலையில் கார்போஹைடிரேட், நார்ப்பொருள், பாஸ்பரஸ், கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ உட்பட ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கிறது. புதினாவை சட்னியாகவும், ஜூஸ் ஆக கூட பயன்படுத்தலாம்.

சரி… புதினா இலையில் என்னென்ன மருத்துவ குணங்களும், அதன் பலன்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம் –

புதினா இலை நமக்கும் எளிதில் ஜீரணசக்தியை கொடுக்கும்.

புதினாவை நாம் தினமும் சாப்பிட்டால் நம் இரத்தத்தை சுத்தமாக்கும்.

புதினா இலை வாய் நாற்றம் அகற்றும்.

புதினா இலையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாக்கும்.

புதினா இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் குணமாக்கும்.

புதினா இலை ஆண்மைக் குறைவை நீக்கும்.

புதினா இலை வயிற்றுப் புழுக்களை அழித்து, வாய்வுத் தொல்லையை அகற்றிவிடும்.

புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகள் சரியாகும்.

புதினா இலையை தினமும் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படும்.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர் புதினா இலை சாற்றை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயத்தில் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் வாந்தியை நிறுத்தும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவற்றை கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு தொல்லை அகலும்.