Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?  வெளியான லேட்டஸ்ட் தகவல்! 

அடேங்கப்பா சுருதிஹாசன் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?   வெளியான லேட்டஸ்ட் தகவல்!  

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் ஆனவர் தான் நடிகை சுருதிஹாசன்.  இவர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற படத்தில் சூர்யாவுடன்  கதாநாயகியாக அறிமுகமாகி அந்தப் படம் வெற்றி பெற்றதும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இறுதியாக சூர்யாவுடன் நடித்த சிங்கம் 3 படத்தை தவிர வேறு படங்களில் சுருதிஹாசன் நடிக்கவில்லை.

இதையடுத்து தமிழில் கைவசம் படங்கள் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சுருதிஹாசன். தெலுங்கில் அவர் நடித்த வால்டர் வீரய்யா, மற்றும் வீர சிம்ஹ ரெட்டி ஆகிய இரண்டு படங்களும் கடந்த பொங்கல் அன்று ரிலீஸ் ஆகின.

சுருதிஹாசன் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருவதை குறித்து வெளிவந்த ட்ரோல்களுக்கு தகுந்த பதிலடி சமீபத்தில் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் தற்போது சுருதிஹாசன் படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் வால்டர் வீரய்யா மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் தலா 2.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து சுருதிஹாசன் பிரபாஸுடன் இணைந்து நடித்து 2023  செப்டம்பர் 28 இல் ரிலீசாகும் சளார் படத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.

 

Exit mobile version