அடேங்கப்பா… மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே!

0
89
#image_title

அடேங்கப்பா… மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா? இது தெரியாம போச்சே!

மஞ்சளில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. எந்த சுபகாரியம் இருந்தாலும் மஞ்சளை தான் முதலில் உபயோகம் செய்வார்கள். அதுவும் திருமணத்தின்போது மஞ்சளுக்கு தனி இடம் உண்டு. திருமண அழைப்பிதழ் முதல் மணமக்கள் மீது அட்சதை தூவும் வரை மஞ்சளை தான் பயன்படுத்துவார்கள். தாலி கயிற்றில் வட மஞ்சளை தான் பூசுவார்கள். மஞ்சள் நம் உடலுக்கு நோய்களை உருவாக்கும் கிருமிகளை அடியோடு அடிகின்றன.

சரி… மஞ்சளில் என்னென்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம் –

மலட்டுத்தன்மை

குழந்தை இல்லாத பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் 4 சிட்டிகை சுத்தமான மஞ்சள் பொடியை கலந்து வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.

தோல்

மஞ்சளை உடலில் தடவி குளித்து வந்தால் தோல் நோய் தொற்றிலிருந்து விடுபடலாம்.

ஆண்மை சக்திக்கு

பாதாம் பாலில் கஸ்தூரி மஞ்சள் சேர்ந்து பருகி வந்தால் ஆண்களுக்கு ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

மூலம்

மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்ள் ஒரு ஸ்பூன் வெண்ணெயில் சிறிது மஞ்சள் பொடி கலந்து உள் மூலம், வெளிமூலம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நாளடைவில் குணமாகும்.

தொற்று நோய்

தொற்று நோய் ஏற்பட்ட பகுதியில் மஞ்சள் கலந்த நீரை தெளித்து வந்தால், தொற்று நோய் பரவாமல் தடுக்கும்.

ஈ தொலையில் விடுபட

ஈக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் நீரில் துளசி இலையை சேர்த்து கலந்து தெளித்து வந்தால் ஈக்கள் தொல்லை குறையும்.

இருமலுக்கு

இருமல் அதிகமாக இருந்தால் உடனே சூடான பாலில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.