Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுமக்களிடம் கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை மிகவும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மளிகை மற்றும் காய்கறி கடை கள் இறைச்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இல்லாமல் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்றி தொற்று சங்கிலியை உடைத்தெறிவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற காணொளிப் பதிவு ஒன்றில் தமிழக மக்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கம் தமிழ்நாட்டில் புதிதாக அரசு அமைந்து இரண்டு வாரங்கள்தான் ஆகியிருக்கிறது என்றும் இரு வாரங்களில் பலவிதமான திட்டங்களை தமிழக மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரண உதவி பெண்கள் அனைவருக்கும் சாதாரண கட்டண பேருந்தில் கட்டணமில்லாத இலவச பயணம் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறு வேலை, இழப்பீடுகள், தூத்துக்குடி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது,ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் செலவுத் தொகை பெறலாம் என்று அறிவித்திருக்கின்றோம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்படி வாங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றம் இவ்வாறு பலவிதமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

https://twitter.com/mkstalin/status/1396497884644724740?s=20

இது எல்லாவற்றையும் விடவும் மிகவும் முக்கியமானது நோய் தொற்றும் தடுப்பு பணிகள் தான் சென்ற இரண்டு வாரத்தில் 17 ஆயிரம் புதிய படுக்கைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நாள்தோறும் 1.7 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக 2100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்6000 செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி இருக்கின்றோம் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இன்று முதல் 31-ஆம் தேதி வரையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிறு உதவிகள் வழங்கப்பட்டது. ஆனால் அதனை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வெளியில் சுற்றி திரிந்ததன் விளைவாக தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு தற்சமயம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்

முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்ற வேண்டும் அவ்வாறு பின்பற்றி நோய்த்தொற்று பரவல் சங்கிலியை உடைத்தெறிவோம் முழு ஊரடங்கு என்பது கசப்பான மருந்து தான் ஆனாலும் அதனை எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். தமிழக மக்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன் தமிழக அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொது மக்கள் எல்லோரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். தமிழக மக்கள் எல்லோரும் முழு உடல் நலம் பெற்றவர்களாக இருந்திட வேண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள எல்லோரும் உணரவேண்டும். முககவசத்தை முழுமையாக அணியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Exit mobile version