Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா தொடங்கியது!

#image_title

புதுச்சேரியில் முதல் முறையாக ஆதிபுஷ்கரணி விழா  தொடங்கியது!

சங்கராபரணி ஆற்றில் துணைனிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குரு பெயரும் ராசிக்கான நதிகளில் புஷ்கரணி விழா 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். மேஷ ராசிக்கு வடக்கில் கங்கை ஆற்றிலும், தெற்கில் சங்கராபரணி ஆற்றிலும் புஷ்கரணிவிழா இந்த ஆண்டு நடக்கிறது. புதுச்சேரியில் முதல் முறையாக வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலை ஒட்டிய சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்கரணி விழா இன்று தொடங்கியது.

அதன்படி இன்று புஷ்கரம் பிறக்கும் நேரத்தில் சப்தநதி தீர்த்த கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மடாதிபதிகள் மற்றும் சிவனடியார்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடலை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடினர்.

புதுச்சேரி சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், கடலூர், விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புஷ்கரணி விழா மே 3-ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று தொடங்கிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிலுக்கு வந்து சிறப்பு யாகம் மற்றும் தீர்த்தவாரியில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Exit mobile version