ஆடி1 அமாவாசை!!எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரப்போகும் அபூர்வம்!!

0
93

ஆடி1 அமாவாசை!!எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரப்போகும் அபூர்வம்!!

தமிழகத்தில் ஆடி மாதம் என்பது மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் தான் அம்மன் பண்டிகைகளும்,குலதெய்வ வழிபாடும் நடைபெறும்.

ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலங்கள் தட்சணாயன காலமாகும். இக்காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடி தெய்வங்களை தரிசிப்பது பெரும் நன்மைகளை பெற்று தரும்.

பொதுவாக ஆடி மாதம் என்பது பீடை மாதம் என பலரால் கூறப்படுவதுண்டு. ஆனால் இது மிகப் பெரிய தவறான கருத்தாகும். பீட மாதம் என்பதே காலப்போக்கில் பீடை மாதம் என்று மாறி இருக்கிறது.

அதாவது மனம் என்னும் பீடத்தில் இறை சிந்தனையை நிறுத்தி நன்மை பெற வேண்டும் என பெரியோர்கள் கூறியுள்ளனர். இதுவே காலப்போக்கில் பீடை என மாறி உள்ளது.

இந்த வருடத்தில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வரப்போகிறது. ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை,பௌர்ணமி வருவது எட்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அபூர்வ நிகழ்வு ஆகும்.

ஆடி அமாவாசை வரும் ஜூலை 17ஆம் தேதி முதல் அமாவாசையாகவும் அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 16 இரண்டாவது அமாவாசையும் வருகிறத.இது ஆடி மாதத்தில் வரும் இரண்டு அமாவாசைகள் ஆகும்.

வரும் ஆடி அமாவாசை என்பது மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளை விட மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஏனெனில் ஆடி அமாவாசைக்கு நம் முன்னோர்களுக்கு நன்றி கடனாக பித்ரு பூஜை செய்வதற்கான ஏற்ற நாள்.

இந்த ஆடி அமாவாசையில் நாம் செய்யும் பித்ரு பூஜை முன்னோர்களுக்கு வருடம் முழுவதும் செய்யும் பூஜைகளுக்கு ஒப்பாகும்.

இரண்டு அமாவாசை வருவதால் எந்த அமாவாசையில் பித்ரு பூஜை செய்வது என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இதில் இரண்டாவதாக வரும் அமாவாசை அன்று திதி கொடுப்பது உகந்தது என அர்ச்சகர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு அமாவாசை தினத்தில் 17ஆம் தேதி வரப்போகும் அமாவாசை சூனிய திதியில் வருவதால் அந்நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீராடுவது உகந்ததல்ல.

ஆடி 31ஆம் தேதி வரும் அமாவாசை விரதம் இருக்க உகந்த நாள் ஆகும்.இது பெரிய அமாவாசையாகும். எனவே முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்வதற்கான உகந்த நாளாக கூறப்படுகிறது.