Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை

ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை

அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘முரசொலி’ என்ற தலைவலி வந்திருக்காது,. ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரே ஒரு ட்விட் இன்று தமிழக அரசியல் களத்தில் கலகலக்க வைத்துள்ளது,. முரசொலி இடம் பஞ்சமி நிலத்திற்கு தான் சொந்தமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தகுந்த சமயத்தில் கூறியதால்,. இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் ஒரு பட்டாவை காட்டி இது பாத்தியப்பட்ட தனிநபருக்கு சொந்தமான பட்டா எனவும் வெளியிட்டிருந்தார்,. இதற்கு பதிலளித்த ராமதாஸ் மூலப்பத்திரம் எங்கே? அவை யாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது என்று அடுக்கடுக்கான கேள்விகளை டிவிட்டர் மூலமாகவே முன்வைத்தார்,. தகுந்த நேரத்தில் நான் முரசொலி பத்திரத்தை வெளியிடுவேன், உண்மை நிலை அன்று தெரியும் என்றும், அதுவே முரசொலி விவரத்தில் பஞ்சமி நிலம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பதிலாக அமையும் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்,.

இந்நிலையில் பாஜகவும் தன் பங்குக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் புகார் அளித்து மத்திய அரசு மூலமாக ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது,. இதனை எதிர்கொள்ள முடியாமல் திமுக தரப்பு திகைத்து கொண்டிருக்கிறது,.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் தமிழக தலைமை செயலருக்கு இடத்தை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது,. மேலும் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் முரசொலி விவகாரத்தில் பஞ்சமி நிலம் என்று தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்,. இது திமுகவினரை கதிகலங்கச் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று தினத்தந்தியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் முரசொலி நிலம் தொடர்பாக விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது,. இதில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்,. திமுக தரப்பில் பேச்சாளர் சிவ.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டனர், காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதத்தில் திருட்டுப் பொருள் எத்தனை கை மாறினாலும் திருட்டுப் பொருள் திருட்டுப்பொருள் தான் என்று நீதிபதி சந்துரு பேசியதை சுட்டிக்காட்டி செ.கு.தமிழரசன் பேசினார்,. இதற்கு பதிலளிக்க முடியாமல் திமுகவின் சிவ.ஜெயராஜ் அவர்கள் முரசொலி இடத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி கட்டடம் இருந்தது உண்மைதான் என்று யாரும் எதிர்பாராதவிதமாக பேசினார்,. இது திமுகவினரை கதிகலங்க செய்துள்ளது,.

மேலும் திமுக தலைமைக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கி உள்ளது,. இதன் காரணமாக திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தினத்தந்தி விவாத நிகழ்ச்சியில் திமுகவினர் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது,. ஆதிதிராவிடர் நல கட்டிடம் முரசொலி அலுவலகம் கட்டப்படுவதற்கு முன்பு இருந்தது என்று திமுகவின் முக்கிய பிரமுகரே தெரிவித்துள்ளதால் அக்கட்சி நிலைகுலைந்து போயுள்ளது.

அசுரன் படம் அதன் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகருக்கு புகழை சேர்த்ததோ இல்லையோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடாமல் செய்துவிட்டது என்று எவராலும் மறுக்க முடியாது,.

Exit mobile version