Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படம்!! டிரெய்லர் தேதியை அறிவித்த படக்குழு!!

Adipurush movie starring Prabhas!! The crew announced the trailer date!!

Adipurush movie starring Prabhas!! The crew announced the trailer date!!

பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் திரைப்படம்!! டிரெய்லர் தேதியை அறிவித்த படக்குழு!!

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 3டி தொழில்நுட்ப படமான ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவுத் இயக்குகிறார். நடிகர்கள் சயிப் அலிகான், கிரித்தி சனோன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் இந்த டீசர் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் மாதம் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

Exit mobile version