ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!

0
96

ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!

நான்கு மாதங்கள் பயணத்திற்கு பிறகு ஆதித்யா எல் 1 விண்கலம் இலக்கை அடையும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சூரியனில் இருக்கும் காந்த புயலை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை நேற்று(செப்டம்பர் 2) பகல் 11.50 மணிக்கு அனுப்பியது. சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்ற ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பெங்களூரு ஐ.ஐ.எம் கல்லூரி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட 7 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று(செப்டம்பர்2) விண்ணில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள “லெக்ராஞ்சியான் பாயின்ட் ஒன்” என்னும் இடத்தில் சூரியனை பார்த்த கோணத்தில் நிலைநிறுத்தப்படுகிறது.

ஆதித்யா எல் 1 விண்கலம் விண்வெளியின் காலநிலை, விண்வெளியின் துகள்கள், காந்த துகள்களின் வெளியேற்றம், சூரியனின் வெப்பம் ஆகியவற்றை ஆய்வு செய்யவுள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 கருவிகளில் 4 கருவிகள் நேரடியாக சூரியனை ஆய்வு செய்யும். மீதம் உள்ள 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு செய்யவுள்ளது.

சூரியனை ஆய்வு செய்வதற்கு விண்ணில் அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் நான்கு மாதம் பயணங்களுக்கு பின்னர் லாக்ரேஞ்சு புள்ளி செல்லும். அதன் பின்னர் ஆதித்யா எல் 1 விண்கலம் அந்த லாக்ரேஞ்சு புள்ளியில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் எந்த தடைகளும் இல்லாமல் சூரியனை கண்காணித்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.