Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை!! 25 சதவீத இட ஒதுக்கீடு!!

Admission of students in private schools!! 25 percent reservation!!

Admission of students in private schools!! 25 percent reservation!!

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை!! 25 சதவீத இட ஒதுக்கீடு!!

அனைத்து குழந்தைகளும் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான் அரசு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இருந்தாலும், இந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

அதன் படி தனியார் பள்ளிகளில் படிக்கும் 25 சதவீத குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை, அந்த பள்ளிகளுக்கு  அரசு செலுத்தும். இது வரை இந்த திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 98 ஆயிரம் குழந்தைகள் படித்து வருகிறார்கள்.  இந்நிலையில் இந்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் இடங்கள் உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 18 ம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள 25 சதவீத மாணவர் சேர்க்கை நாளை குலுக்கல் முறையில் நடைபெறுகிறது. சமுகத்தில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயில்வதற்காக, அந்த பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் படி சென்னையில் உள்ள 653 தனியார் சுயநிதி பள்ளிகளில் இந்த கல்வியாண்டிற்கான விண்ணப்பபங்கள் பெறப்பட்டு, நாளை குலுக்கல் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எனவே விண்ணப்பங்கள் கொடுத்த பெற்றோர்கள் நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில், சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version