நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் சில முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, கந்தகோட்டம் முருகன் கோவில், சென்னை வடபழனி முருகன் கோவில், பழனி, திருப்பரங்குன்றம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில், ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை ஆகிய முக்கிய கோவில்களில் நாளை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.