இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

0
256
#image_title

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!

பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை தேர்வுகளே இன்னும் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தன்னாட்சி கல்லூரிகளை தவிர பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மதிப்பீட்டு பணி ஜூன் 21ம் தேதி தொடங்குகிறது.

இளநிலை மூன்றாம் ஆண்டு தேர்வு முடிவதற்குள் முதுநிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டது. மேலும் முதுநிலை படிப்பாகளுக்கான சேர்க்கை நாளை வரை அதாவது மே 31ம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்படத்து பேராசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசு பல்கலை ஆசிரியர் சங்க துணைத் தலைவர் திருநாவுக்கரசு அவர்கள்பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன. இதை அறிந்தும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியிருப்பது அதிருப்தியை அளிக்கின்றது. இந்த அறிவிப்பால் பல்கலை கழகத்தில் நேரடியாக படிக்க காத்திருக்கும் மாணவர்கள் அவதிப்படுவார்கள்என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாரதியார் பல்கலை பதிவாளர் முருகவேல்துணைவேந்தர் கமிட்டியில் உள்ள இரண்டு பேர் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் கலந்தாலோசித்து முதுநாலை பட்டபடிப்புகளுக்கான சேர்க்கை தேதி நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதுஎன்று கூறினார்.