இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் விஜய் கூட்டணி குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தல் பற்றியும், பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது.
தற்போது புதிதாக கட்சி தொடங்கி அதன் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார் தவெக தலைவர் விஜய். இன்று நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சி குறித்து விவாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் பயணத்தால் ஏதேனும் பாதிப்பு வருமா? இல்லை அவர் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கும் நிலையில் அது குறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் பிரச்சனை குறித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது.