Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவசர அவசரமாக கூட்டணியை அறிவித்ததன் பின்னணி என்ன! வெளியானது மர்மம்!

தமிழ்நாட்டில் பாஜக 60 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கின்றது என்ற முருகனின் பேட்டி பாஜக தலைமையில் தான் கூட்டணி என்ற வீட்டில் துரைசாமியின் கருத்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக இடையே நடந்த வார்த்தை போர்கள் இவ்வாறான அரசியல் சூழலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வரும் தேர்தலில் தொடருமா என்ற கேள்வி குறியே தமிழக அரசியலில் பெரிதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான அமைச்சா் சென்னை வந்தார். ப்ரோட்டோ காலை மீறி முதல்வரை விமான நிலையம் சென்று அமைச்சரை வரவேற்றது பாஜக கொடியை விட அதிகமாக அதிமுக கொடிகள் அமித்ஷாவிற்கு வரவேற்பு கொடுத்தது என விமான நிலையத்திலேயே ஒரு வித்தியாசம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் கலைவாணர் அரங்கில் பங்கேற்ற அரசு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் உரையாற்றியபோது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார். அரசு விழாவில் இவ்வாறு கூட்டணி அரசியல் பற்றி பேசலாமா என அதிமுகவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து விலக போகின்றோம் என்று நினைத்திருந்த நிலையில் கூட்டணி தொடரும் என்று அறிவித்து விட்டாரே என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இடையிலேயே விவாதங்கள் நடைபெற்றன.

பன்னீர்செல்வம் இவ்வாறு அறிவித்ததையடுத்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் இந்த அரசு விழாவில் மற்ற அரசியல் எல்லாம் பேசிய அமித்ஷா அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பற்றி மிக கவனமாக தவிர்த்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து கூட்டணி விஷயத்தில் அதிமுக அவசரப்பட்டு விட்டதா எனவும், அல்லது பாஜகவின் நிர்பந்தத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்றும் இருவேறு கருத்துக்கள் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் இடையே உலாவிகொண்டிருகின்றனர்.

சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சி என்ற நிலையை தாண்டி எதிரெதிர் கருத்துக்களையும் எதிரெதிர் பதிலையும் கூறி வந்தார்கள். ஒருகட்டத்தில் முதல்வர் உட்பட அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் மீது வருமான வரி உள்ளிட்ட சோதனைகளை ஏவிவிட்டு தேர்தல் சமயத்தில் அதிமுகவின் பெயரை கெடுக்க வேண்டும் எனவும் அதே அஸ்திரத்தை திமுகவிற்கு பயன்படுத்தி திராவிட கட்சிகளே இப்படித்தான் என்ற தோற்றத்தை உருவாக்குவது எனவும் பாஜக தலைமையில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி அதன் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்றுதான் பாஜக சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு இருந்தது.

பாஜக மூன்றாவது அணி அமைக்குமானால் இப்போது திமுக வின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அல்லது விடுதலை சிறுத்தைகள் எதுவும் பாஜகவுடன் சேரப் போவதில்லை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளும் புதிய தமிழகம் கட்சியும் தான் பாஜகவுடன் இணைய தயாராக இருந்தன.

அவ்வாறு ஒரு நிலை உருவாகும் என்றால் அதிமுக தனிமை படுத்தப்படும் அதிமுக தனிமைப்படுத்தப்பட்டால் திமுக வெற்றி பெறுவது சுலபமாகிவிடும் என கணக்குப் போட்டுத்தான் அதிமுக அமித்ஷா முன்னிலையிலேயே கூட்டணி தொடரும் என்று அறிவித்திருக்கின்றது அதோடு பாஜகவிற்கு ஒரு மென்மையான நிர்பந்தத்தை கொடுக்க முடியும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

Exit mobile version