Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

 

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் உள்ளதாக கூறி அதிகாரிகளுடன் அதிமுகவை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தமாக தமிழகத்திலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி வாக்குச்சாவடியில் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் மட்டும் 5 நபர்களுக்கு மேல் உள்ளதாக கூறி அதிகாரிகளுடன் அதிமுக மற்றும் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

மேலும் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகளை அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரும் அழைத்துவரக்கூடாது என்றும்,அவர்களது உறவினர்கள் மட்டுமே அழைத்து வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Exit mobile version